எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தொட்ட தென் துருவம்...

தகவல்கள் / உலகம்

மார்ச் மாதம் முடிவதற்கு முன்பே, சென்னையில் வெளியே தலை காட்ட இயலவில்லை. இந்த சூழலில் மே மாதத்தைப் பற்றி நினைக்கும் போதே தலை கிறுகிறுவென சுற்றுகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் இது என்று எப்போது நாம் சிந்திக்க துவங்குவோம். நம்முடைய சின்ன சின்ன செயல்பாடுகளால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தை நாம் எப்போது உணருவோம்? கேள்விகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்முடைய இந்த தொடர் தொழில்மயமாக்கலின் விளைவாக எங்கோ இருக்கும் உயிரினங்கள் அழிவை சந்திக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இதுவரை தெரிந்து கொள்ளவில்லை என்றால் இனிமேலாவது தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் இப்போது அனுபவிக்க துவங்கியுள்ளோம். முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த வாரம், பனிக்காலத்தை அடைய இருக்கும் அண்டார்டிக்கா பகுதியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வடதுருவம் அதற்கு சற்றும் குறைவில்லாமல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை பதிவு செய்துள்ளது.

இந்த மாத துவக்கத்தில் “அட்மாஸ்பிரிக் ரிவர்” என்ற நிகழ்வு பசுபிக் பகுதியில் இருந்து அண்டார்டிக் பெருங்கடல் பக்கமாக வெப்பம் மற்றும் ஈரபதத்ததை கடத்திச் சென்றது. இதன் விளைவாக கனமழை பெய்து, பனிப்பாறை உருக்கத்தை விரைவுப்படுத்தியது. காற்றில் நிலவும் ஈரப்பதம் தொடர்ந்து அதிகப்படியான வெப்பநிலையை தக்கவைத்துக் கொள்ள இயல்பு நிலையைக் காட்டிலும் 4.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாஅக காரணமாக அமைந்தது.

ஆர்டிக் பிரதேசத்திலும் இதே நிலைமை தொடருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அங்குள்ள பனியின் அடர்த்தி 5 அடி வரை குறைந்துள்ளது. துருவப் பகுதியில் அதிகரிக்கும் வெப்பநிலை உலகின் பல நாடுகளில் உள்ள தாழ் நிலங்கள் மற்றும் பாதிக்கப்பட கூடிய பகுதிகளில் வெப்பநிலையை மேலும் அதிகரித்துள்ளது.
போலார் அம்ப்ளிப்ஃபிகேஷனின் தாக்கம்

துருவ பகுதிகளில் உள்ள வெள்ளை நிற பனிக்கட்டிகள் தான் கிரகிக்கும் வெப்பநிலையை மீண்டும் வான்வெளியை நோக்கி பிரதிபலிக்கும் நிகழ்வை நாம் போலார் அம்ப்ளிப்ஃபிகேஷன் என்று அழைக்கின்றோம். பனிப்பாறைகள் உருகி, அதற்கு அடியில் இருக்கும் கருநிற கடலையோ அல்லது நிலத்தையோ பிரதிபலிக்கும் போது அதன் மறைமுக தாக்கங்களை பாதிக்கப்படக் கூடிய பிராந்தியங்கள் அனுபவிக்கின்றன.
South Pole warmer by 40C North Pole by 30C Simultaneous highs alarm scientists

கடற்கரை பகுதிகளில் உணரப்பட்ட இத்தகைய சீதோசண நிலை உள்நாடுகளில் உணரப்படவில்லை என்றாலும் கூட முன் எப்போதும் இல்லாத வகையிலான வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் -50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும், 3200 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் கான்கார்டியா இந்த ஆண்டு -12.2டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. அதே போன்று ரஷ்யாவில் உள்ள வோஸ்டோ என்ற பகுதியில் எப்போதும் -45 டிகிரி வெப்பநிலை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு அது -17.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.


1979-2000 என்ற காலத்தில் பதிவான வெப்பநிலையோடு ஒப்பிடும் போது அண்டார்டிகா 4.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் உலகில் உள்ள இதர நாடுகள் 0.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. இது சாதாரண வெப்பநிலை மாற்ற நிகழ்வாக கூட இருக்கலாம். காலநிலை மாற்றத்தின் தாக்கம் என்று இதனை கருத்தில் எடுத்துக் கொள்ள கூடாது. ஆனாலும் கூட இதே போன்ற நிகழ்வுகள் தொடர்கதை ஆனால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க