இந்த தானங்களை கோவிலுக்கு செய்வதன் மூலம் பதவி கிடைக்கும், செல்வாக்கு கிடைக்கும், குடும்பம் தழைக்கும்.

ஆன்மீகம் / ஆன்மீக தகவல்கள்

இந்த தானங்களை கோவிலுக்கு செய்வதன் மூலம் பதவி கிடைக்கும், செல்வாக்கு கிடைக்கும், குடும்பம் தழைக்கும்.

தொடர்ந்து ஒரு குடும்பத்தில் துயரங்கள் நடந்து கொண்டிருந்தாலோ, அல்லது நடக்க வேண்டிய காரியங்கள் தடை பட்டுக் கொண்டிருந்தாலோ அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் உடனடியாக வீட்டில் இருக்கும் அனைவரின் ஜாதகத்தையும் கொண்டு சென்று ஜாதகம் பார்க்க செல்வார்கள். அங்கு சென்றதும் ஜாதகம் பார்ப்பதில் உள்ள குறைகள், நிறைகள் அனைத்தையும் கூறி விட்டு, கோவிலுக்கு சென்று இந்த பரிகாரம் செய்யுங்கள் அனைத்தும் சரியாகும் என்று சொல்வார்கள். அப்படி அவர்கள் சொல்வதை கேட்டு நாமும் அதுபோன்ற பரிகாரங்களை முறையாகச் செய்து வருகிறோம். இவ்வாறு செய்வதனால் என்ன நிவர்த்தியாகிறது, என்ன நடக்கும் என்று பலருக்கும் தெரியாது. அப்படி அது பற்றி தெரியாமலேயே பலரும் பல தானங்களைச் செய்து வருகின்றனர். கோவிலாக இருந்தாலும் சரி அல்லது ஏழையாக இருந்தாலும் சரி தானங்கள் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பல இருக்கின்றன. அவ்வாறு நீங்கள் கோவிலுக்கு செய்யும் தானங்கள் மூலம் நீங்கள் அடையும் பலன்கள்.

தானம் என்பதில் பல வகைகள் இருக்கின்றன. ஒரு சிலர் ஏழை எளியவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பது, உடை வாங்கி கொடுப்பது, படிக்க முடியாத பிள்ளைகளை படிக்க வைப்பது போன்ற நல்ல காரியங்களைச் செய்வார்கள். ஒரு சிலர் மனதில் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்று மொட்டை அடிப்பது, அங்கப்பிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் செய்வது என்று வேண்டிக் கொள்வார்கள். ஒரு சிலர் கோவிலில் நடத்தப்படும் தங்களுக்குத் தாங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள்.

அதுபோல கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் பொழுது அங்கு ஒரு சிலர் முருகன் திரு உருவச்சிலை, சிவன் திருவுருவச்சிலை, தட்சிணாமூர்த்தி சிலை மற்றும் கருவூல சிலை இவற்றை வாங்கிக் கொடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல் ஒருசிலர் நவகிரகத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், கொடிமரத்தை நான் செய்து கொடுக்கிறேன் என்று பலரும் பலவித பொறுப்புகளை தங்களுக்காக ஏற்றுக் கொள்வார்கள்.

இப்படி எந்தவித தானமாக இருந்தாலும் பொதுவாக தானம் செய்வதில் நல்ல பலன்கள் கிடைக்கிறது. நம் வாழ்க்கையில் நாம் செய்த பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் தீர்ந்து புண்ணியம் கிடைக்கிறது. நிறைய நபர்கள் கோவிலுக்கு மணி வாங்கிக் கொடுப்பதை விருப்பமாக செய்வார்கள். அவ்வாறு செய்யும் பொழுது உங்கள் இல்லத்தில் அமைதி நிலைத்திருக்கும். எந்த வித சண்டை, சச்சரவும் வராது.

அவ்வாறு கோவிலுக்கு பஞ்சபாத்திரம் வாங்கி கொடுப்பதனால் உங்கள் குடும்பத்தினர் நிறைய ப
வேத காரியங்களை செய்வார்கள். கோவிலுக்கு பிள்ளையார் செய்து கொடுத்தால் நீங்கள் செல்லும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாக அமையும். நவகிரகங்கள் செய்து கொடுத்தால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

கோபுர கலசம் அமைத்துக் கொடுத்தால் விரைவில் மிக உயர்ந்த பதவி கிட்டும். தட்சணாமூர்த்தி செய்து கொடுக்க குரு பகவானின் பூரண அருள் கிடைக்கும். சிவபெருமானின் அருளும் கிடைக்கும். துர்க்கை அம்மனை அமைத்துக் கொடுக்க எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை சமாளிக்க கூடிய தைரியம் கிடைத்துவிடும். சிவபெருமானை அமைத்துக் கொடுத்தால் உங்கள் வாழ்வில் கிடைத்த பெரிய வரமாகும். முருகப்பெருமானை அமைத்துக் கொடுப்பது தடைகள் அனைத்தையும் தகர்த்து விடும். பெருமாளை அமைத்துக் கொடுப்பது நீங்கள் இந்த உலகில் நிச்சயம் சுகவாசியாக வாழ்வீர்கள்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க