கடன் பிரச்சனைகள் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள்

ஆன்மீகம் / ஆன்மீக தகவல்கள்

கடன் பிரச்சனைகள் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள்


சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோஷ காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபடலாம்.

இந்த வழிபாட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும். மனச்சங்கடங்கள் விலகும். பதவி உயர்வு கிடைக்காமல் இருப்போருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் ஏற்படும்.


லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரம்

“ஓம் வ்ஜர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ரீÖய தீமஹி
தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்”

என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும், சகல நலன்களும் உண்டாகும்..
 
முக்கியமாக கடன் தொல்லைகளை செவ்வாய் என்ற கிரகமே பெரும்பாலும் குறிப்பிட்டுக் காட்டும். ஆதலால் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து அருகிலுள்ள முருகன் சன்னிதியில் மாலை வேளை களில் 12 முறை பிரதட்சணம் செய்து நெய் தீபமேற்றி வழிபட்டு வரவேண்டும்.
 
முக்கியமாக கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதமிருந்து தரிசித்து வந்தால் கடன்கள் தீர வழி வகைகள் பிறக்கும். கோவிலுக்குள் சென்று வழிபட்ட உடனேயே திரும்பி வந்து விடுதல் கூடாது. இரண்டரை நாழிகைப் பொழுதான ஒரு மணி நேரமாவது இறைவன் திருக்கோவிலில் இருந்து வழிபட வேண்டும்.
 
மேலும், திருக்கோவிலுக்குள் நுழைந்ததில் இருந்து யாரிடமும் எதுவும் பேசாமல் ‘ஓம் ஸர வண பவாய நம’ என்ற கந்த சுவாமியின் திவ்ய மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டே இருப்பதன் மூலமாக ஒரு தெய்வீக அலை இயக்கத்திற்கு நம்மை நாமே ஆட்படுத்திக்கொள்ளலாம்.
 
அதன் விளைவாக மனதில் அமைதியும், அமைதியின் விளைவாக தெளிவான சிந்தனையும், அதன் விளைவாக காரியத் தெளிவும், சங்கடங்களின் நிவர்த்தியும் உண்டாகி வளமான வாழ்வினை படிப்படியாக அடைந்து விடலாம்.
 
எல்லா கடன்களும் தீர என்ன பரிகாரம் என்று இப்பொழுது பார்ப்போம்…
 
* தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் 6,8 மடங்காக, ( 6,8,12,16,18,32,36,64,108 ) முறை தினமும் பாராயணம் செய்ய கடன் அடைபடும்.
 
* கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது உகந்தது. முக்கியமாக செவ்வாய், சனிக்கிழமைகளில் கடன் வாங்கக் கூடாது.
 
* இது தவிர மந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் தினமும் காலை, மாலை பாராயணம் செய்தால் இன்னும் நல்லது.
 
* எனக்கு கடன் பிரச்சினை இல்லை. எதிர் காலத்தில் இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைபவர்களும் தினமும் ஒரு முறை படித்து வரலாம். நம்பிக்கையோடு படித்தால் நிச்சயம் பலன் உண்டு.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க