செய்த பாவக் கருமங்கள் தீர தினமும் பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வழிபடுங்கள்...

ஆன்மீகம் / ஆன்மீக தகவல்கள்

செய்த பாவக் கருமங்கள் தீர தினமும் பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வழிபடுங்கள்

 மனிதனாக பிறந்து விட்டாலே எல்லோரும் எல்லா விதமான விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்துடன் இருப்பது வழக்கம் தான்.

ஆனால் நாம் செய்யும் பாவ கருமங்கள் நமக்கு எத்தகைய பலன்களை எதிர்காலத்தில் கொடுக்கும்? என்கிற விஷயத்தையும் தெரிந்து கொள்வதில் அவன் கவனம் செலுத்த வேண்டும்.
 
அப்படி மட்டும் கவனம் செலுத்தி விட்டால் பாவ கருமங்கள் நம்மை பின் தொடராது. இதனால் நமக்கு வரவேண்டிய யோகங்கள் தடைப்படாமல் வந்து சேரும். நாம் எதிர்பார்த்த வாழ்க்கை நமக்கு அமையும் என்பது நியதி! ஆனால் இன்று பெரும்பாலும் யாரும் அவ்வாறு செய்வது கிடையாது.
நாளை நாம் எப்படி இருக்க போகிறோம்? நமக்கு என்ன நடக்கப் போகிறது? என்பதை எல்லாம் நாம் கண்டு கொள்வதே கிடையாது. இன்று எப்படி இருக்கிறோம்? இன்று மகிழ்ச்சியாக இருக்கிறோமா? இதனால் யாருடைய மனம் புண்பட்டாலும் சரி, யாருடைய வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் சரி என்று சுயநலமாக செயல்படுவதால் தான் கர்ம வினைகள் பின்தொடர்கின்றன.

இத்தகைய கர்ம வினைகள் அனுபவித்தே ஆக வேண்டிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது, இருப்பினும் சிலர் இதிலிருந்து விடுபடுவதற்கு பல்வேறு பரிகாரங்களை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் அறியாமலோ, தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்க ரொம்பவும் எளிதாக தினமும் பூஜை அறையில் செய்யக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். சுயநலமாக இருப்பவர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான நிலையில் இருந்து விடப் போவது கிடையாது.
ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களை கீழே தள்ளிவிடும் என்கிற புரிதல் இல்லாமல் அவர்கள் நடந்து கொள்ளும் இந்த குணத்தால் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். மனிதன் செய்த பாவ கருமங்கள் தீர முதலில் பூஜை அறையில் தினமும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். தினமும் முடியாவிட்டாலும் வெள்ளிக்கிழமையில் கட்டாயம் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறப்புக்கு உரியது ஆகும்.  
இந்த வெள்ளிக் கிழமையில் தீபம் ஏற்றி வழிபடும் பொழுது ஒரு சிறிய அளவிளான தட்டில் பூஜைக்கு என்று வெல்லக் கட்டி ஒன்றை வையுங்கள். வெல்லம் என்பது இயற்கையாக கிடைக்கக் கூடிய அறுசுவைகளில் இனிப்பு வகையை கொடுக்கக் கூடியது ஆகும். இந்த வெல்லத்தை கட்டியாகவோ அல்லது பொடித்து தூளாகவோ இறைவனுக்கு பிரசாதம் வைத்து தினமும் வழிபட வேண்டும். நீங்கள் பூஜை எல்லாம் முடித்த பின்பு அதைக் கொண்டு போய் வெளியில் நிலை வாசலில் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே கோவில் கோவிலாக சென்று குழந்தை பாக்கியம் இல்லையே என்று கவலைப்படுபவர்கள், இந்த ஒரு தானத்தை மட்டும் செய்து பாருங்கள், உங்கள் வீட்டிலும் மழலை சத்தம் கேட்குமாம்! இந்த வெல்லத்தை தேடி வரும் எறும்புகளும், பூச்சிகளும் அதை உணவாக சாப்பிட்டு நம்முடைய பாவத்தை ஏற்றுக் கொண்டு விடும். இதனால் நம்முடைய பாவ கர்மங்கள் ஆனது பாதியாக குறையும் என்பது நம்பிக்கை.

 ஒரு சிறு எறும்புக்கு தானம் செய்யும் இந்த வெல்லக்கட்டி, நம்முடைய வாழ்க்கையே புரட்டிப் போடும் அளவிற்கு அற்புதமான பரிகாரமாகவும் இருக்கிறதாம். நீங்களும் இதே மாதிரி உங்களுடைய பாவ கருமங்கள் தீர வெல்லக்கட்டியை வைத்து வழிபட்டு எறும்புகளுக்கு தானம் கொடுத்து தான் பாருங்களேன்..

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க