ப்ரமோஷனில் அஜித் ரசிகர்கள் தீவிரம்... பிபா உலகக் கோப்பை வரை சென்ற துணிவு…
அஜித் நடிப்பில் தயாராகி வரும் துணிவு படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களின் ஒருவரான அஜித், சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவில் சாதித்த முன்னிண நடிகர்களின் ஒருவராக உள்ளார். தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அஜித், வலிமை படத்திற்கு பிறகு துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் எச்.வினோத், போனி கபூர் ஆகிய மூவரும் 3-வது முறையாக இணைந்துள்ள துணிவு படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும், உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள துணிவு படத்திற்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படம் குறித்து நாள்தோறும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே துணிவு படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் விதமாக கால்பந்து உலககோப்பை தொடரில் வெயிட்டி ஃபார் துணிவு என்று எழுதிய கொடி வைத்துள்ளது வைரலாகி வருகிறது.
அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலககோப்பை தொடர் உலகளவில் பெரிய வைரலாகி வருகிறது. இங்கு நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கால்பந்து ரசிகர்கள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,இதனை பயன்படுத்தி அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் ப்ரமோஷன் பணியை தொடங்கியுள்ளனர்.
அஜித் ஃபேன் பேஜ் என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் அஜித் ரசிகர்கள் ஒருவர் வெயிட்டிங் ஃபார் துணிவு பொங்கல் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் பிரபலமான பல இடங்களில் போர்டு வைத்து வலிமை அப்டேட் கேட்டது வைரலாக பரவியது. அந்த வகையில் தற்போது துணிவு இணைந்துள்ளது.