பைரவரை வழிபடும்முறை
பைரவரை வழிபடும்முறை :

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு) எல்லா பரிகாரங்களும் செய்து விரக்தி அடைந்தவர்கள் எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறுபவர்கள் , எக்கசெக்கமான சிக்கலில் மாட்டி கொண்டவர்கள் பெரிய அளவில் பரிகாரமோ , பூஜையோ , ஹோமமோ செய்ய முடியாதவர்கள் அல்லது செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் ஒரே மாத்திரையில் எல்லா வியாதியும் குணமடைய வேண்டும் என எதிர்பார்ப்போமே , அதே போல எந்த பிரச்னையாக இருந்தாலும் ஒரே வழிபாட்டில் தீர்வை எதிர்பார்ப்பவர்கள் இந்த பைரவ வழிபாட்டினை செய்யலாம் தினமும் பைரவருக்கு ஒரு சாதாரண விளக்கு போட வேண்டும் அவ்வளவு தான் தினமும் முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் 7 விளக்கு போட வேண்டும் அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் உத்தமம் ( ஆனா பலன் கிடைக்க தாமதம் ஆகலாம் ) விளக்கு போட ஆரம்பிச்சதுல இருந்து 2 வது தேய்பிறை அஷ்டமிக்குள்ள நிறைய நன்மை ஏற்பட்டிருக்கும் அதுவும் வெளிப்படையாகவே நமக்கும் தெரியும் , நம்மை சார்ந்த எல்லாருக்கும் தெரியும் . 64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் , எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் . காசியில் இருக்கும் பைரவரில் இருந்து சின்ன கோவில்களில் இருக்கிற பைரவர் வரைக்கும் ஒரே சக்திதான் நிபந்தனை : வழிபாட்டுல அலட்சியம் கூடாது , திறந்து இருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போடணும் . கண்டிப்பா அசைவம் கூடாது . அசைவத்தோட தொடர்பு இருக்கும்வரை எந்த வழிபாட்டுலயும் பலன் இருக்காது.

வாழ்வை வளமாக்கும் விநாயகர் வழிபாடுஎந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், பிள்ளையாரை வணங்கியபின் தொடங்கினால் அந்த செயலில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பது அனுபவரீதியான, திடமான நம்பிக்கை. பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். நமது தேவைக்கேற்றப்படி பல விதமான பொருட்களால் ஆவாஹனம் செய்து வழிபட்டு, அதற்கான பலன்களை பெற்றுக்கொள்ளலாம். மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டு பலன் மஞ்சளில் பிள்ளையார் (மஞ்சள் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால், சகல சௌபாகியங்களும் கிடைக்கும். குங்கும பிள்ளையார் வழிபாட்டு பலன் குங்குமத்தில் பிள்ளையார் (குங்கும பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும். புற்று மண் பிள்ளையார் வழிபாட்டு பலன் புற்று மண்ணில் பிள்ளையார் (புற்று மண் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் விவசாயம் நன்கு செழிப்படையும், நோய்கள் நீங்கும். வெல்ல பிள்ளையார் வழிபாட்டு பலன் வெல்லத்தில் பிள்ளையார் (வெல்ல பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் உடலில் ஏற்படும் கட்டிகள் குணமாகும். கடல் உப்பு பிள்ளையார் வழிபாட்டு பலன் கடல் உப்பில் பிள்ளையார் (கடல் உப்பு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாட்டு பலன் வெள்ளெருக்கில் பிள்ளையார் (வெள்ளெருக்கு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் பில்லி, சூனியம் விலகி, வாழ்வில் வளமும் நலமும் சேரும். விபூதி பிள்ளையார் வழிபாட்டு பலன் விபூதியில் பிள்ளையார் (விபூதி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் நோய்கள் நீங்கும். சக்கரை பிள்ளையார் வழிபாட்டு பலன் சக்கரையில் பிள்ளையார் (சக்கரை பிள்ளையார், சீனி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் சக்கரை நோய் நீங்கும்.