இன்று, 2023 ஜனவரி 17ம் தேதி செவ்வாய் கிழமை, சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு முறைப்படி பெயர்ச்சி ஆக உள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக, அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றிருந்த சனீஸ்வரர் மீண்டும் மகர ராசிக்கு திரும்பினாலும், அவர் அக்டோபர் 23ம் தேதி வரை சனி பகவான வக்ர நிலையிலேயே மகர ராசியில் சஞ்சரிப்பார். அக்டோபர் 23ம் தேதிக்கு பிறகு, தனது பாதையை மாற்றி கடிகார சுற்றில் அதாவது நேர் திசையில் நகரத் தொடங்குவார்.
சனிப் பெயர்ச்சியால் நற்பலன் பெறும் ராசிகள்
தனுசு - ஏழரை சனி முடிவு
மிதுனம் - அஷ்டம சனி முடிவு
ரிஷபம், கன்னி ராசிக்கு நற்பலன்கள் கிடைக்கும்
கும்ப ராசியில் சனி
சனி பெயர்ச்சியின் காரணமாக ஏழரை சனியிலிருந்து விடுதலை பெற்று மிக சிறப்பான பலன்கள் பெறக்கூடிய ராசியில் தனுசு ராசி முக்கியமானது.
மிதுன ராசி
இத்தனை காலமாக சனியின் பிடியில் சிக்கி நிம்மதி இழந்து தவித்துவந்த மிதுன ராசியினரருக்கு இனி நல்ல காலம் தான்.
ரிஷபம், கன்னி ராசியினருக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இனி அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும்..
சனி பெயர்ச்சி 2023 மத்திம பலனை அனுபவைக்கப் போகும் ராசிகள்
சனி பெயர்ச்சியின் காரணமாக, மீன ராசியினருக்கு ஏழரை சனி தொடங்க உள்ளது. அதே போல மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவானால், கும்ப ராசியினர் மிக மிக மோசமான பலன்களைப் பெறுவார்கள். மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு பாதச் சனி தொடங்கும். அஷ்டம சனி தொடங்க உள்ள கடக ராசியினரும், அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்க உள்ள விருச்சிக ராசியினரும் கவனமாக இருப்பது நல்லது.
2023 ஜனவரி 17 சனிப் பெயர்ச்சியால் மோசமான பலன் பெற உள்ள ராசிகள்
மீனம் - ஏழரை சனி தொடக்கம்
கும்பம் - ஜென்ம ராசியில் சனி சஞ்சாரம்
கடக ராசி - அஷ்டம சனி
விருச்சிகம் - அர்த்தாஷ்டம சனி
சிம்மம் - கண்ட சனி ஆரம்பம்
சனி பகவான் தரும் நற்பலன்கள்
சனி பகவான், தண்டனை கொடுத்து வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் கொடுக்கும் ஆசான் என்று கருதப்படுகிறார். ஏழரை ஆந்த், சனியின் பிடியில் இருந்து வந்தவர்களுக்கு, வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்கள் அனைத்தும் கிடைத்துவிடும்.
சனியின் பாதிப்பு குறையும் போது, வேலை, தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகி அற்புத பலனைப் பெற்றிட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபமும், ஆரோக்கியமும் மேம்படும்.