சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்பிரைஸ் அப்டேட்... ஜெய்லரில் தமன்னாவை லாக் செய்த நெல்சன்...
‘ஜெய்லர்’. கோலமாவு கோகிலா மற்றும் பீஸ்ட், டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்க, சன்பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் அனிரூத் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக இந்த படத்தில் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.


படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அவ்வப்போது அப்டேட்டுகளை வரிசையாக இறக்கிக் கொண்டிருக்கிறது சன்பிக்சர்ஸ் நிறுவனம். படத்தை பொறுத்தவரையில் ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துக் கொண்டிருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜெய்லரில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், லீட் ரோலில் நடிக்கும் முன்னணி நடிகை யார் என்ற தகவல் மட்டும் வெளியாகவில்லை. தமன்னா நடிப்பதாக தகவல் வெளியானாலும் அது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், அந்த தகவலை இன்று உறுதி செய்திருக்கிறது சன்பிக்சர்ஸ் நிறுவனம். தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் ஜெய்லர் படத்தில் தமன்னா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இவர்கள் மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெய்லர் படத்தில் ரம்யா கிருஷ்ணா, பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய டிரேட் மார்க் கதாப்பாத்திரமான ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற ரோலில் நடித்து வருகிறார். இதுவரை 65 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. திட்டமிட்டப்படி சூட்டிங் நிறைவடைந்தால், இந்த ஆண்டு தீபாவளி ’ஜெயலர்’ தீபாவளியாக இருக்கும் என திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.