துர்க்கை அம்மனை வழிபடும் முறை...
துர்க்கை அம்மனை வழிபடும் முறை
துர்க்கையை வழிபாடு செய்தால் நமக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். குடும்ப கஷ;டங்கள் விலகி ஓடும்.
துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும்.
நல்ல மஞ்சள் நிறமுடைய எலுமிச்சம் பழங்களை வாங்கி இரண்டாக அறுத்துச் சாறு பிழிந்துவிட்டு கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழ கிண்ண விளக்கில் எண்ணெயை ஊற்றி திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்ய வேண்டும்.
அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து துர்க்காதேவியை வழிபட வேண்டும்.
துர்க்கைக்கு ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது. ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.
துர்க்கைக்கு பூஜை செய்யும்போது ஒவ்வொருவிதமான பூக்களை கொண்டு வழிபடலாம்.
துர்க்கைக்குரிய பூக்கள் :
ஞாயிறு - வில்வமாலை
திங்கள் - வெள்ளை அரளிப்பூ
செவ்வாய் - செவ்வரளி, செந்தாமரை
புதன் - துளசி
வியாழன் - சாமந்திப்பூ
வெள்ளி - அரளிப்பூ
சனி - நீலோத்பவம்
மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பாள்.