வாராஹி உபாசனை...
வாராஹி உபாசனை

வல்லமை என்ற சொல்லின் வடிவம்தான் வாராஹி! சொல்வல்லமை; செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள்.

வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு!

பயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி!

அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந்திர வாராஹி, வார்த்தூளி என்று எத்தனை வடிவங்கள். நான்கு கரம், எட்டு கரம், பதினாறு கரம் என்று பலப்பல கோலங்கள்.

வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.

நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வாராஹியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும். நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வழிபட செவ்வாய்க்கிழமையிலும், கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும், குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வாராஹியை வழிபட வேண்டும்.

சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.

ஸ்ரீ வாராஹி தேவி, ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ர தேவதைகளுள் மிகவும் மேன்மையானவர். அம்பிகையின் மந்திரிகளுள் ஒருவர். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் அருளுபவள். தமது கரங்களில் விவசாயம் சம்பந்தமான தொழில்கள் மேம்பாடு அடைய ஏர்கலப்பையும், உலக்கையையும் ஏந்தியவள்.

நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வாராஹி தேவி.

வாராஹி உபாசனை
மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வாராஹி தேவி.
ஸ்ரீ வாராஹியின் பனிரண்டு பெயர்களைச் சொன்னாலே அம்பிகை ஸகல கார்ய சித்தியும், அளவற்ற அருளையும் அருளுவாள்.
1. பஞ்சமீ 2. தண்டநாதா 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி
ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்து முடித்தபின் தான் ஆவரண பூஜை பூர்த்தியாகும்.
பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வாராஹி மாலா போற்றுகின்றது.

அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபராசக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி.

அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்து மனிதகுலத்தைக் காக்க வராகி வடிவம் கொண்டாள்   வராக முகத்தை உடை யவள்; இழிகுணம் படைத்த தீயோரது உடலங்கங்களைக் காலத்தில் அழிப்பாள்; உலக்கையோடு மற்றும் ஏழு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள்; சிரித்த முகத்தையுடையவள். தங்கள் துன்பங்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் என்றும் நீங்காது இருப்பாள்.   மனதின் சுய நிலையான சுத்த நிலையே  மூலமான வஜ்ர வராகி .  அவள் எம்முள்ளே உறைகிறாள்,  எங்கும் தேடவேண்டாம்,  வெளியே தேடுதல் சிறுபிள்ளைத்தனமானது, மூடத்தனமானது.  மனதின் உண்மை நிலையானது

வராகியில் பல வடிவங்கள் உண்டு. இரண்டு கைகள், நான்கு கைகள், எட்டுக்கை, பதினாறு கை என்று விளங்கும். எத்தனை கைகளில் எத்தனை ஆயுதம் ஏந்தியிருந்தாலும்  அவளுடைய மூலமான முக்கிய கருவிகள் உலக்கையும் கலப்பையும்தான்.  வராகியில் பலவகைகள் உண்டு. ஸ்வப்ன வராகி போன்றவர்கள்  பரிவார தேவதைகளும் உண்டு. அந்தினீ, ருந்தினீ,ஜம்பினீ,ஜ்ரும்பினினீ, மோஹினி என்று பலர் இருக்கிறார்கள்.  பகளாமுகி போன்ற தெய்வங்களும் வராகி சம்பந்தப்பட்டவர்கள்தாம்.    

உலகாளும் ஆதிபராசக்தியின் மறுபெயரே வராகி ,  வராகியை வராகிலக்ஷ்மி என்றும் அழைக்கலாம்  

வராஹி மூல மந்திரம் எண்ணியவை நிறைவேறும் :

ஒம் க்லீம் உன் மத்தபைரவி வாராஹி

ஸ்வ்ப்பண்ம் டட: ஹும்பட் ஸ்வாஹா !!

ஸ்ரீ மஹா வாராஹியின் அபூர்வமான மூல மந்திரம்

ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ

வார்த் தாளி , வார்த்தளி

வாராஹி வராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம :

ருத்தே ருந்தினி நம :

ஜம்பே ஜம்பினி நம :

மோஹே மோஹினி நம :

ஸதம்பே ஸ்தம்பினி நம:

ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.

“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’

திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடையலாம்
வராக (பன்றி) முகம், மூன்று கண்கள் மற்றும் எட்டு திருக்கரங்களுடன் திகழ்பவள் ஸ்ரீ வாராஹி. தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கட்கம் (கத்தி), உலக்கை, கலப்பை, உடுக்கை மற்றும் அபய - வரத முத்திரைகளுடன் காட்சி தருபவள். நீல நிற மேனியளான இந்த தேவி சிவப்பு நிற ஆடை உடுத்தி, சந்திர கலை தரித்த நவரத்தினக் கிரீடம் அணிந்தவளாக சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள் என்கின்றன புராணங்கள்

உபாஸனை என்றால் ஒரே தெய்வத்தை மனதில் மேன்மையானதாக இருத்திக்கொண்டு அந்த தெய்வத்தையே சதா சர்வ காலமும் நினைந்து போற்றி வழிபாடு செய்வதாகும்.

பூஜை செய்யும் போது பூஜகன் மந்திரங்களால் சூழப்பட்டு, அஹமேத்வம் எனும் சொல்லுக்கிணங்க பூஜகனே அம்பிகையாக மாறிச் செய்வது தான் இந்த பூஜையின் மிக முக்கியமான அம்சமாகும். பூஜகன் பூஜனை மந்திரத்தினால் மானஸீகமாக தன்னை பூஜையில் எரித்துக்கொள்வதே இந்த பூஜையின் யாகமாகக் கருதப்படுகிறது. ஆகையினாலேயே இந்த பூஜை "ஸ்ரீவித்யா மஹா யாக க்ரமம்" என்று போற்றி அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ என்றால் செல்வங்களை வாரிவழங்கும் லக்ஷ்மிக்குரிய அக்ஷரம்