கோலிவுட்டில் புதிய கூட்டணி! செல்வராகவன் படத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி...
ரேடியோ ஜாக்கியாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது நடிகராக பல ரசிகர்களை கவர்ந்திருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. தனது முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். LKG படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'வீட்ல விசேஷம்' படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது, இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருந்தது. அதனைத்தொடர்ந்து வெளியான அதிரடி - த்ரில்லர் திரைப்படமான 'ரன் பேபி ரன்' ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்புத்திறனை மேம்படுத்தி காண்பித்தது. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் கவர்ந்து இருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் எனும் படத்தின் படப்பிடிப்பை முடித்து இருக்கிறார். இவருக்கு வரிசையாக பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், இவரது அடுத்த படம் பற்றிய பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனரும், நடிகருமான செல்வராகவனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரையில் இயக்குனராக இருந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வந்த செல்வராகவன் படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார், இவரது கதாபாத்திரங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்து இருக்கிறது.
அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவனுடன் இணைந்து நடிக்கிறார், இந்த படத்திற்கு 'சொர்க்கவாசல்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இப்படம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, செல்வராகவன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவில்லையென்றும் இருப்பினும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சொர்க்கவாசல் படத்தில் கருணாஸ் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளர் குழு கர்நாடகாவின் ஷிமோஹாவில் கிட்டத்தட்ட 37 நாட்கள் நடத்தி முடித்திருப்பதாகவும், படம் பற்றிய பிற முக்கியமான தகவல்கள் விரைவில் வெளியாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.