சித்தர்கள் கூறிய கிரக தோஷங்களை போக்கும் சூட்சும குளியல் பரிகாரம்!
ஜாதகத்தில் தற்சமயம் நடக்கும் திசை, கிரகம், நமக்கு அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் எது என அறிந்து அதற்கேற்ப, தீய பலன்களை தரக்கூடிய கிரகங்களுக்கு உரிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம்.

தீய பலன் தரக்கூடிய கிரகங்களிடம் நற்பலன் பெறுவதற்கு நாம் குளிக்கும் போது அந்த கிரகங்களுக்குரிய பொருட்களை நீரில் கலந்து குளித்தால் நற்பலன்களை பெறலாம்.

சூரியன் :

கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

சந்திரன் :

தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்த்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.

செவ்வாய் :

வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமணத்தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

புதன் :

மஞ்சள் கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

வியாழன் :

கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

சுக்கிரன் :

பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

சனி :

கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

ராகு :

மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

கேது :

அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.