நவகிரக பிரகாரம்...
🔯நவகிரக பிரகாரம்...

🔯சூரியனால்பாதிக்கப்பட்டவர்கள் வெல்லம் அல்லது கருப்பட்டிகளை அவருடைய வயது  எத்தனையோ அவ்வளவு எண்ணிக்கையில் ஓடும் ஆற்று நீரில் விடவும்

🔯சந்திரனால் பாதிக்கப்பட்டவர்கள் பசும்பாலை ஒரு பாத்திரம் நிறைய ஊற்றி இரவு படுக்கப் போகும் முன்பு கட்டிலுக்கு அடியில் வைத்து மறுநாள் காலை அதை வேப்பமரத்தின் வேரில் ஊற்றிவிடவும்- 11 திங்கள் வைத்து செவ்வாய் கிழமைகளில் வேரில் ஊற்றிவிடவும்

🔯செவ்வாயில் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைப்பொங்கல் அல்லது இனிப்பு பலகாரம் செய்து கோயில்களில் தானமாக வழங்கவும்

🔯புதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு செம்பு நாணயத்தில் நடுமையத்தில்ஓட்டை செய்து ஆற்று நீரின் மையத்தில் விட்டுவரவும்

🔯குருவால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு அருந்தும் முன் குங்கும பூ பொடியை நாக்கின் நடுமையத்தில் வைத்து சிறிது தியானம்  செய்தபின் உணவை அருந்தவும் .குருவினால் ஏற்படும் கஷ்டம் வெகுவாக குறையும்


🔯சுக்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் பசுமாட்டுக்கு சாமை அல்லது தினை பச்சை இலைகளை வழங்கவும் சாமை திணை இலைகள் கிடைக்காதபட்சத்தில் ஏதோ பச்சை தழைகளைவழங்கலாம்

🔯சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை எண்ணெய் தந்தை குளிக்கவும்.இரும்பு அல்லது கருப்புநிற பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தன்முகம் பார்த்து ஏழைகளுக்கு தானம் வழங்கவும்,

🔯ராகுவால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கிகளை ஒரு கவரில் போட்டு இரவு படுக்கும் முன் தன்னருகே வைத்திருந்து மறுநாள் அதை ஏதோ கோயிலில் கொடுத்துவிடவும் மேலும் தீய்ந்த மரக்கட்டைகள் அல்லது எரிந்த நிலையில் உள்ள மரக்கட்டைகளை ஆற்றில் வீசவும்

🔯கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் நாய்களுக்கு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி/ரொட்டிகளை வழங்கவும்.