வேர்க்கடலை பர்ஃபி

சமையல் / இனிப்பு

தேவையான பொருள்கள் ::

  • வறுத்த வேர்க்கடலைப் பருப்பு (தோல் நீக்கியது) - ஒரு கப்
  • பொடித்த வெல்லம் - அரை கப்.

செய்முறை:

  • வெல்லத்தூளில் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கொதிக்க வைத்து அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடுங்கள்.
  • பாகு நல்ல பதம் வரும்வரை கொதிக்கவேண்டும்.

பாகு பதம்:

  • சிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வரவேண்டும். அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பி, துண்டுகள் போடுங்கள்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க