பாலிவுட் நடிகர் காதர் கான் காலமானார்!
பிரபல பாலிவுட் நடிகர் காதர் கான் உடல் நலக்குறைவால் கனடாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று காலை உயிர் இழந்தார். அவரின் உடல் டொரண்டோவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் காதர் கான் (81). காபூலில் பிறந்த இவர், கடந்த 1973ம் ஆண்டு ராஜேஷ் கண்ணாவின் டாக் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என்று கலக்கிய இவர் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 250 படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ளார்

வாழ்கை 

காதர் கான் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி பிறந்தவர். அவரின் அம்மா பாகிஸ்தானை சேர்ந்தவர். அவர் என்ஜினியரிங்கில் மாஸ்டர்ஸ் டிப்ளமோ முடித்துவிட்டு பைகுல்லாவில் உள்ள எம்.ஹெச். சாபூ சித்திக் பொறியியல் கல்லூரியில் ஆசிரியராக வேலை செய்தார்.