பருப்பு-தக்காளி தோசை
தேவையான பொருள்கள்::

  • புழுங்கலரிசி - ஒரு கப்
  • பச்சரிசி - ஒரு கப்
  • துவரம்பருப்பு - கால் கப்
  • கடலைப்பருப்பு - கால் கப்
  • உளுத்தம்பருப்பு - கால் கப்
  • வெந்தயம் - ஒரு ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 10
  • தக்காளி - 4
  • உப்பு -தேவையான அளவு.


செய்முறை:

  • தக்காளியை பொடியாக நறுக்குங்கள். அரிசி, பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தெடுங்கள்
  • அரைத்த மாவை 2 மணி நேரம் புளிக்கவிட்டு,  தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து வேகவையுங்கள்.சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.