தயிர் கத்தரிக்காய் கிரேவி சிம்பிள் செய்முறை
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் – 4
எண்ணெய் – 2 டீ ஸ்பூன்
கடுகு – 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4
தனியா தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு.
தயிர் கத்தரிக்காய் கிரேவி செய்முறை
முதலில் தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து சூடேற்றவும் . தொடர்ந்து எண்ணெய் விட்டு கத்தரிக்காயை சுருங்க வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
பிறகு, அதே எண்ணெயில் கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும். தொடர்ந்து அவற்றோடு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மேலே கொடுக்கப்பட்டுள்ள தூள் வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அவற்றுடன் 1 கப் தயிர் சேர்த்து கிளறவும்.
இதன் பிறகு முன்னர் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்துக் கிளறவும். பின்னர் கால் கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதிக்கும் போதே தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது சுவையான தயிர் கத்தரிக்காய் கிரேவி தயாராக இருக்கும், இவற்றை சாதம், சப்பாத்தி என உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.