டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி…
கத்திரிக்காய் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:

பெரிய கத்திரிக்காய் – 1
புளி – 1 சிறிதளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 3
பூண்டு – 4
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு

கத்திரிக்காய் சட்னி சிம்பிள் செய்முறை:

முதலில் கத்தரிக்காய் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அதன் பின்னர் உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.

பின்னர் அதே பாத்திரத்தில் கத்திரிக்காய் சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

தொடர்ந்து புளியை சேர்த்து நன்கு வதக்கி கீழே இறக்கி குளிர வைக்கவும்.

இப்போது ஆறவைத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து அதில் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர், ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி கீழே இறக்கவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான கத்திரிக்காய் சட்னி தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசிக்கவும்.