உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு துவையல்
ஏகப்பட்ட மருத்துவ பண்புகளை கொண்டுள்ள கொள்ளுவில் துவையல் செய்யத் தேவையான பொருட்கள்:
கொள்ளு – 1 கப்
எண்ணெய்
பெருங்காயம் – 1 துளி அளவு
காய்ந்த மிளகாய் – 4, 5
பூண்டு – 7, 9 பள்ளு
கருவேப்பிலை – 3 கொத்து
தேங்காய் துருவல் – சிறிய கப் 1
புளி – 1 சுண்டக்காய் அளவு
கொள்ளு துவையல் செய்முறை:
முதலில் கொள்ளுவை ஒரு பாத்திரத்தில் இட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஆற வைத்துக்கொள்ளவும். பிறகு தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.
அதன் பின்னர், அவற்றோடு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு அதில் புளி சேர்த்து நன்கு வதக்கி கீழே இறக்கவும்.
இந்த கலவை நன்கு ஆறிய பிறகு, முன்பு வறுத்து வைத்திருந்த கொள்ளு மற்றும் இந்த வதக்கிய கலவையை சேர்த்து ஒரு மிக்சியில் இட்டு துவையலுக்கு ஏற்றார் போல் அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது அற்புதமான கொள்ளு துவையல் தயாராக இருக்கும். இவற்றை உங்களுக்கு விருப்பமான உணவுகளுடன் சேர்த்து ருசிக்கவும்.