பெப்பர் முட்டை மசாலா
தேவையான பொருட்கள்::

  • முட்டை-3
  • வெங்காயம்-2
  • மஞ்சள்தூள்- கால் ஸ்பூன
  • மிளகுதூள்- 2 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய் -3 ஸ்பூன்
  • கருவேப்பிலை-சிறிது
  • கடுகு- அரை  ஸ்பூன்

செய்முறை::

  • முடடையை வேகவைத்து  உரித்து  2  ஆக நறுக்கி வைத்து கொள்ளவும்
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,  கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் . மஞ்சள்தூள்,மிளகுதூள்,,உப்பு சேர்த்து  நன்கு வதக்கி  நறுக்கிய முட்டையை போட்டு  அடுப்பை சிம்மில் வைத்து முட்டை உடையாமல் கிளறி  இறக்கவும்.
  • பெப்பர் முட்டை மசாலா ரெடி .சாம்பார்   மோர் குழம்புடன் சாப்பிட சுப்பர் காம்பினேசன்.