பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்
தேவையான பொருட்கள் :

  • பொன்னாங்கண்ணி கீரை-1 கட்டு
  • தக்காளி-4
  • துவரம் பருப்பு-1  டம்ளர்
  • சின்ன வெங்காயம்-10
  • சாம்பார் தூள்    - 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- சிறிதளவு
  • பெருங்காயத்தூள்  -சிறிதளவு
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

தாளிக்க::

  • கடுகு  -அரை ஸ்பூன்
  • சீரகம்   - அரை ஸ்பூன்
  • வெந்தயம் - கால்  ஸ்பூன்
  • கருவேப்பிலை ,மல்லி இலை சிறிதளவு

செய்முறை :

  • பருப்பை  பெருங்காயத்தூள்  மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.
  • பின்பு கடாயில்  சிறிது எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளியை  போட்டு வதக்கி அதில் நறுக்கிய கீரையை சேர்த்து  தேவையான அளவு  தண்ணீரையும், சாம்பார் தூளையும்  சேர்த்து வேக விடவும்.
  • வெந்தவுடன் உப்பு போட்டு பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒரு தனி கடாயில் போட்டு தாளித்து அதில் கொட்டி கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான பொன்னாங்கண்ணி சாம்பார் ரெடி