மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு
 தேவையான பொருட்கள்:

  • சிக்கன் - 1/2 கிலோ
  • வெங்காயம் - 2   ( நறுக்கியது)
  • தக்காளி -   2 ( நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2   ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • கொத்தமல்லி - சிறிது
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 5ஸ்பூன்
  • வறுத்து அரைப்பதற்கு...
  • வரமிளகாய் - 6
  • மல்லி -  2 ஸ்பூன்
  • மிளகு - 1   ஸ்பூன்
  • சோம்பு -   1/2   ஸ்பூன்
  • கசகசா - 1   ஸ்பூன்
  • உடைத்த  கடலை   - 1   ஸ்பூன்
  •  பட்டை - 1 இன்ச்
  • கிராம்பு - 3
  • தேங்காய் -  1  பத்தை
  • தாளிப்பதற்கு...
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  •  பிரியாணி இலை - 1
  • சோம்பு - 1/2 டீஸ்பூன்
  • வரமிளகாய் - 2

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை கடாயில்   போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி,  ஆற  வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு  கடாயை   அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க  வேண்டும்.
  • பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிவிட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • பின்பு அதனுடன்தக்காளியை சேர்த்து நன்கு மசியும்  வரை  வதக்க வேண்டும். பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள்  போட்டு  , சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
  • அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் விழுது  சேர்த்து 10 நிமிடம்   கொதிக்க   வைத்து   பின்பு அடுப்பை   15 நிமிடம்அடுப்பை சிம்மில்   வைத்தால்குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்ததும்   இறக்கி  .  கொத்த மல்லியைத் தூவி மூடி வைக்கவும்