சிக்கன் மஞ்சூரியன்
தேவையான பொருள்கள்::

  • எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
  • பூண்டு -  அரை கப் பொடியாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
  • குட மிளகாய் - 2 பெரிதாக நறுக்கியது
  • வெங்காயம்   - 1   நறுக்கியது
  • சோயா சாஸ்-  1 ஸ்பூன்
  • தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
  • மிளகு தூள்  -  2 ஸ்பூன்
  • கார்ன் பிளவர் மாவு - 2  ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு
  • வெங்காயத்தாள் - தேவையான அளவு

ஊற வைக்க::

  • எலும்பில்லாத சிக்கன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2   ஸ்பூன்
  • 1  முட்டையின் வெள்ளை  கரு
  • கார்ன் பிளவர் மாவு  -  2 ஸ்பூன்
  • மைதா மாவு- 2 ஸ்பூன்
  • அரிசி மாவு  - 2 ஸ்பூன்
  • உப்பு  - தேவைாயன அளவு

செய்முறை::

  • முதலில் எலும்புகளை நீக்கிய  சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • முட்டையை கலக்கி  ஊற வைக்க கொடுத்துள்ள  பொருள்கள் அனைத்தையும்  சேர்த்து  நன்கு மிக்ஸ் பண்ணி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்பு   கடாயில்   ஊற்றி  சூடானதும்  பொன்னிறமாக மெதுவான தீயில்  சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.
  • .கடாயில்4 ஸ்பூன்  எண்ணெய்விட்டு நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய்,குட மிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன்   தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள்  அனைத்தையும் போட்டு கிளறவும்.
  • கார்ன் பிளவர் மாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக்கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிகறியையும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாள்   அதில் போட்டு  3 நிமிடம் மூடிபோட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கிளரி  இறக்கவும்.