ஸ்வீட் அவல் புட்டு
தேவையானப்பொருட்கள்:

  • அவல் - 1 கப்
  • வெல்லம் பொடித்தது - 1/2 கப்
  • தேங்காய்த்துருவல் - 1/4 கப்
  • ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
  • நெய் - 4 ஸ்பூன்

செய்முறை::

  • வெறும் வாணலியில் அவலைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும். சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். பொடித்தெடுத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும்.
  • வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
  • பின்னர் அதை மீண்டும் அடுப்பில் ஏற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.   பாகில் தேங்காய்த்துருவல் மற்றும் பொடித்த அவல் இரண்டையும் போட்டு கிளறி உடனே அடுப்பை அணைத்து விடவும்.
  •  பின்னர் அதில் ஏலக்காய் பொடி, நெய், ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு மூடி வைக்கவும்.