பச்சரிசி முறுக்கு
தேவையான பொருள்கள்:

  • பச்சரிசி – 4 கப்
  • உளுந்து -1/4 கப்
  • பாசிப் பருப்பு – 1/4 கப்
  • வெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • வெள்ளை எள் – 2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு.
  • எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

  • பச்சரிசியை கழுவி ( ஊற வைக்கக்கூடாது ) நன்றாக காய வைக்கவேண்டும்.
  • உளுந்து, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
  • காய்ந்த பச்சரிசி, உளுந்து, பாசிப்பருப்பு மூன்றையும் சேர்த்து மாவுமெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் முருக்குமாவு, வெண்ணெய், எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பக்குவமாக பிசைந்து முருக்கு உரலில் இட்டு பிழிந்து எடுக்கவும். இந்த முருக்கு நல்ல மொறுமொறுப்புடன் ருசியாக இருக்கும்.