புதினா தக்காளி சாதம்
தேவையானவை:

  • பச்சரிசி  -  1   கப்
  • உப்பு   -  தேவையான அளவு.

அரைக்க:

  • புதினா  - அரை கட்டு
  • மல்லித்தழை -  அரை கட்டு
  • பச்சை மிளகாய் -  4
  • இஞ்சி   - ஒரு துண்டு,
  • பூண்டு - 4 பல்
  • மஞ்சள்தூள்  - கால் ஸ்பூன்
  • தக்காளி  3

தாளிக்க:

  • எண்ணெய்  - 2  ஸ்பூன்நெய்   - 2  ஸ்பூன்,
  • பட்டை   ஒரு துண்டு


செய்முறை:

  • அரிசியை  ஊற  வைத்து  உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.
  • புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
  • எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை தாளித்து, புதினா , மல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.
  • சிறிது உப்பு சேர்த்து,   பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி, அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் இறக்கவும்.
  • சுவையான  புதினா   தக்காளி  சாதம் ரெடி