கறிவேப்பிலை தொக்கு
தேவையானவை:

  • கறிவேப்பிலை உருவியது – 3 கப்
  • உளுத்தம் பருப்பு – கால் கப்
  • காய்ந்த மிளகாய் – 20.
  •  புளி – எலுமிச்சை அளவு
  • வெல்லம் – ஒரு சிறு துண்டு
  • நல்லெண்ணெய்  - 1  குழிக்கரண்டி
  • உப்பு  - தேவையான அளவு
  • தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காயதூள் - சிறிதளவு

செய்முறை:

  • கறிவேப்பிலையைக் கழுவித் துடைத்து, துணியில் பரப்பி உலரவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், சீரகம், உளுத்தம்பருப்பை வாசனை வந்து நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையை அதே எண்ணெயில், சிறிது சிறிதாக வதக்கி எடுங்கள்.
  • கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். வதக்கிய கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, சீரகம், புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரையுங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம், மிளகாய் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.