வறுத்த கறி குழம்பு
தேவையான பொருட்கள்::

  • மட்டன்- அரை கிலோ
  • மிளகாய் தூள் -   4 ஸ்பூன்
  • மல்லி துாள்   - 2  ஸ்பூன்
  • மஞ்சள் தூள்   - கால் ஸ்பூன்
  • தேங்காய், பொடியாக நறுக்கியது – 1/4 கப்
  •  தக்காளி, பொடியாக நறுக்கியது – 1
  •  வெங்காயம், பொடியாக நறுக்கியது  2
  • பொட்டு கடலை  -  4 ஸ்பூன்
  •  பட்டை, லவங்கம் - சிறிதளவு
  •  கசகசா – 1  ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு  பேஸ்ட்  - 2 ஸ்பூன்
  • கருவேப்பிலை  - சிறிதளவு
  •  உப்பு   -  தேவையான அளவு
  • எண்ணெய்  - தேவையான அளவு
செய்முறை::

  • கறியை நன்கு கழுவி  சுத்தம்  செய்து அதனுடன்  1 ஸ்பூன் மிளகாய் தூள்  மஞ்சள் தூள்  உப்பு சேர்த்து கிளரி  10 நிமிடம் மூடி வைக்கவும்
  • பின்பு கடாயில் 4   ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிக்ஸ் பண்ணிய கறியை பொட்டு நன்கு சிவக்கும் வரை அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வறுத்து எடுத்து வைக்கவும்.
  • பின்பு   மீதி மிளகாய் தூள் ,  மல்லிதூள்,   தேங்காய் ,  பொட்டு கடலை,  கசா கசா,, சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  • ஒரு கடாயில்   சிறிதளவு  எண்ணெய்  ஊற்றி   இஞ்சி பூண்டு  பேஸ்ட்போட்டு  வதக்கி  அதனுடன் வறுத்த  கறி  அரைத்த தேங்காய்  கலவை தேவையான அளவு  உப்புமற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்
  • குழம்பு கொதிக்கும் போது நறுக்கிய வெங்காயம்  தக்காளி சேர்த்து சேர்த்து 10 நிம்டம்  கொதிக்க  வைக்கவும்.
  • பின்பு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டுபட்டை, லவங்கம் கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி  இறக்கவும்.
  • சுவையான வறுத்த கறி குழம்பு  ரெடி