வஞ்சிரம் கருவாடு தொக்கு
தேவையான பொருள்கள்::

  • வஞ்சிரம்  கருவாடு - 100 கிராம்
  • பெரிய வெங்காயம் -  3
  • தக்காளி - 3
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • தனியா தூள்  - 1  ஸ்பூன்
  • நல்லெண'ணெய் - 1 குழிக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை::

  • கருவாடை சின்னதாக  நறுக்கி நன்கு கழுவி எடுத்து வைக்கவும். தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும் அதனுடன் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கி மசாலா வாசனை போனவுடன் தக்காளி  தேவையான உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் கழுவி வைத்துள்ள  கருவாடு போட்டு வதக்கி  1 டம்ளர் தணணீர்  சேர்த்து நன்கு வேகவைத்து கிரேவி கெட்டியானவுடன் இறக்கவும்