தேங்காய் பூரி

தேவையான பொருட்கள்

அரை கப் தேங்காய்

 2 கப் பச்சரிசி மாவு

 2 கப் தண்ணீர்

உப்பு

2 டீஸ்பூன் எண்ணெய்

பொறிக்கும் அளவு எண்ணெய்

 செய்முறை:

தேங்காயில் உள்ள கருப்பு பகுதியை நீக்கிவிட்டு, அதை அரைத்துகொள்ளவும். தொடர்ந்து பச்சரிசி மாவை வறுத்து கொள்ளவும். அதிகமாக வறுக்க வேண்டாம். தொடர்ந்து பச்சரிசி மாவில், தேங்காய் சேர்த்து கலந்துவிடவும். 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இந்நிலையில் மாவில் இதை சேர்த்து பிசையவும். தொடர்ந்து சிறிய உருண்டைகளாக மாற்றவும். தொடர்ந்து வாழை இலையில் உருண்டைகளை வைத்து, அதன் மேலே தட்டு வைத்து வட்டமாக பூரி போல் மாற்றவும். தற்போது இதை சூடான எண்ணெய்யில் சேர்த்து பொறித்து எடுக்கவும்.