தேவையான பொருள்கள்::
- பச்சரிசி - 1 கப்
- புழுங்கல் அரிசி - 1 கப்
- உளுந்து - கால்கப்
- இளநீர் - 1 கப்
- ஈஸ்ட் - ஒரு ஸ்பூன்
- பால் - சிறிதளவு,
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
- அரிசி வகைகள், உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
- ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும்.
- பிறகு, ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக வார்த்து எடுக்கவும்.