பன்னீர் காளான் சாண்ட்விச்
தேவையான பொருள்கள்:

  • பிரட் -10 துண்டு
  • காளான் - 200 கிராம்
  • பன்னீர்  - 200 கிராம்
  • பச்சை மிளகாய் - 2
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 4
  • இஞ்சி -  2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  • கிராம்பு - 3
  • மிளகு - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் மிக்ஸியில் மிளகு, சீரகம், மற்றும் கிராம்பு போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். காளான், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் இஞ்சி, பன்னீரை துருவிக் கொள்ளவும்   
  • பின்னர் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி இஞ்சி மற்றும் வெங்காயம் போட்டு  நன்கு வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு, 5 நிமிடம் வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் பன்னீர் மற்றும் காளான் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்து இறக்க வேண்டும்.
  • பின்பு பிரட்டை பொன்னிறமாக டோஸ்ட் செய்து, அதில் இந்த காளான் கலவையை வைத்து, மற்றோரு பிரட்டை அதன் மேல் வைத்து, இரண்டாக நறுக்கி பரிமாற வேண்டும்.