முட்டை பெப்பர் வறுவல்
தேவையான பொருள்கள்::

 • அவித்த முட்டை - 4
 • நறுக்கிய  வெங்காயம் - 2
 • கடுகு - அரை ஸ்பூன்
 • மிளகாய் தூள் -அரை  ஸ்பூன்
 • மிளகு தூள் - அரை ஸ்பூன்
 • கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்
 • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
 • நல்லெண்ணெய் -  3  ஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை::

 • முதலில்   முழு  முட்டையை குறுக்காக  கீறி வைக்கவும்.
 •  ஒரு  பாத்திரத்தில்  மசாலா  தூள்  அனைத்தும்  சேர்த்து தேவையான  உப்பு  சேர்த்து  அதனுடன்   1  ஸ்பூன்   எண்ணெய்  சேர்த்து   நன்கு  மிக்ஸ்  பண்ணி   தேவையானால்  சிறிது  தண்ணீர் சேர்த்து   அத்துடன் முட்டைகளைச் சேர்த்து 10  நிமிடம்   ஊற வைக்கவும்.
 • பின்பு  கடாயில்   மீதி  எண்ணெய் ஊற்றி,   கடுகுபோட்டு  தாளித்து   நறுக்கிய  வெங்காயத்தை   போட்டு நன்கு   வதக்கி   ஊற  வைதத   முட்டைகளைச்   சேர்த்து  அடுப்பை  சிம்மில் வைத்துமெதுவாக  நன்கு  பிரட்டி  இறக்கவும்.
 • அனைத்து  வகை   சாதத்திற்கும்   ஏற்ற, மிளகு  முட்டை   வறுவல்  ரெடி