பச்சை மொச்சை கார குழம்பு
தேவையானவை:

  • மொச்சைப்பருப்பு – ஒரு கப்
  • மல்லி தூள்  – ஒரு ஸ்பூன்,
  • சாம்பார் பொடி – 3  ஸ்பூன்,
  • தேங்காய் விழுது  – அரை கப்,
  • உப்பு – தேவையான அளவு,
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப்
  • கடுகு, வெந்தயம்,சீரகம், பெருங்காயம் –  தாளிப்பதற்க  தேவையான அளவு
  • கறிவேப்பிலை  - சிறிதளவு.
  • நல்லெண்ணெய்  - 1 குழிக்கரண்டி

செய்முறை:

  • துவரம் பருப்பு, பாசிப்பருப்பு  இரண்டையும் வேக வைத்து மசித்து கொள்ளவும்
  • புளியை  ஊற வைத்து  கரைத்து  கொள்ளவும்  அதனுடன்   சாம்பார் பொடி, மல்லி தூள் , உப்பு சேர்த்து மொச்சையைப் போட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்றாக கொதித்ததும், வேக வைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து,   தேங்காய் விழுது  சேர்த்து   கொதிக்க விடவும்.
  • குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, வெந்தயம் முதலியவற்றி தாளித்துக் கொட்டி கரு வேப்பிலை  தூவி பரிமாறவும். சுவையயான குழம்பு ரெடி