உருண்டை மோர்க்குழம்பு
 தேவையான பொருட்கள் :

  • துவரம்பருப்பு – ஒரு கப்
  • காய்ந்த மிளகாய் – 4
  • மிளகு – 6
  • இஞ்சி – ஒரு சிறு துண்டு
  • உப்பு – தேவையான அளவு,
  • கடுகு    - அரை ஸ்பூன்
  • பச்சைமிளகாய் 4,
  • சீரகம் –  1  ஸ்பூன்
  • மோர் – 2 கப்
  • தனியா –  1  ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – ஒரு கப்
  • கொத்த மல்லி , கறி வேப்பிலை – சிறிதளவு .
  • எண்ணெய்       -   1    ஸ்பூன்


செய்முறை:

  • சிறிதளவு 1    ஸ்பூன்   துவரம் பருப்பு, பச்சைமிளகாய், சீரகம், தனியா, இஞ்சி, தேங்காய் துருவல் எல்லாவற்றையும்   ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த    மசாலா   விழுது  மற்றும்   மோர்  உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  • மீதி   துவரம்பருப்பை நன்றாக ஊற விடவும். இதனுடன் காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து பிசையவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்புக் கலவையைப் போட்டு கெட்டியாகக் கிளறவும். இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேக விடவும்.
  • கடாயில், கலந்து வைத்த மோர் கலவையுடன் வெந்த உருண்டைகளையும் போட்டு, கொத்த மல்லி, கறி வேப்பிலை தூவி, ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • சுவையான  உருண்டை மோர்க்குழம்பு ரெடி