தேவையான பொருள்கள்::
- புடலங்காய் - 200 கிராம்,
- துவரம் பருப்பு - 1/2 கப்,
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்,
- மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
- உப்பு - தேவைக்கு.
- வறுத்து அரைக்க...
- எண்ணெய் - 2 ஸ்பூன்,
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் - 3,
- துருவிய தேங்காய் - 3 ஸ்பூன்,
- மிளகு, சீரகம் - 1 ஸ்பூன்,
- அரிசி - 1 டீஸ்பூன்
- கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
- பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை::
- துவரம் பருப்பில் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் வேக வைத்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய், அரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
- வறுத்ததை தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் புடலங்காய், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். கடாயில் வேக வைத்த பருப்பு, காய் கலவை, அரைத்த கலவை சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதித்ததும் கடுகு, உ.பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.