வெல்லம், வேர்க்கடலை… என்ன நன்மை? எப்படி பயன்படுத்துவது?
வெல்லப் பாகு எடுத்து வேர்க்கடலை கலந்து வேர்க்கடலை மிட்டாய் உருண்டைகள் வீட்டில் எளிதாக தயாரிக்கலாம். இந்த வேர்க்கடலை மிட்டாய் பர்ப்பி இனிப்பாகவும் சுவையாக இருப்பதொடு மட்டுமல்லாமல், உடலுக்கு வலிமையையும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
 வேர்க்கடலை, வெல்லம் பாகு, வெல்லம் வேர்க்கடலை, பர்பி, வேர்க்கடலை மிட்டாய், நன்மைகள், A healthy combo Peanut and jaggery, healthy combo Peanut and jaggery, healthy snacks, healthy combo, food tips, healthy food tips
உடலை வலுப்படுத்துவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவக்கூடிய பல உணவுகள் உள்ளன. ஆனால், வெல்லப் பாகு மற்றும் வறுத்த வேர்க்கடலை இரண்டையும் பர்பியாக செய்து சாப்பிடும்போது அது சத்தான உணவாக மாறுகிறது. வெல்லப் பாகு எடுத்து வேர்க்கடலை கலந்து வேர்க்கடலை மிட்டாய் உருண்டைகள் வீட்டில் எளிதாக தயாரிக்கலாம். இந்த வேர்க்கடலை மிட்டாய் பர்பி இனிப்பாகவும் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், பசி நேரங்களில் சாப்பிட்டு உடலை வலுப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழியாகும்.

ஆரோக்கியமான வேர்க்கடலை வெல்லப்பாகு கலவை பர்பியின் நன்மைகள்:


வேர்க்கடலையில் உள்ள செலினியம், மற்றும் வெல்லத்தில் உள்ள மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும், தசைகளை வலிமையாக்குகிறது.
வேர்க்கடலை + வெல்லப்பாகு சேர்ந்த இனிப்பான சுவையான கலவை ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இரத்த சோகைக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. வேர்க்கடலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றன.
வேர்க்கடலை நார்ச்சத்துள்ள உணவாகக் கருதப்படுகிறது. அதே சமயம் வெல்லத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்து போன்ற கூறுகள் உள்ளன. அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
வெல்லப்பாகு மற்றும் வேர்க்கடலையில் காணப்படும் கால்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
ஆனால், அதே நேரத்தில் வேர்க்கடலை + வெல்லப்பாகு கலந்த பர்பி மற்றும் வேர்க்கடலை மிட்டாய்களை அதிகப்படியாகவும் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், இது மலச்சிக்கல் போன்ற வயிற்று தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் பிஸ்கட், சாக்லேட் அல்லது சிப்ஸ் ஆகியவற்றுக்கு பதிலாக ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஏன் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது ஒரு முழுமையான உணவு, ஆரோக்கியமானது. ஆனால் சாப்பிடுவதற்கும் அல்லது தயார் செய்தவற்கும் சிக்கல் இல்லாத உணவு.
நுண் தாது சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் பாலிபினால்களின் கலவை இதில் உள்ளது.
நல்ல கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இது இதயம் மற்றும் எலும்புகளுக்கு நல்லது. குறிப்பாக தடகள விளையாட்டு மற்றும் ஜிம்னாஸ்ட் குழந்தைகளுக்கு இந்த வேர்க்கடலை பர்பி நல்லது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிக அதிகமாக இருப்பதால், பழங்களை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல உணவாக அமைந்துள்ளது.
இதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி பருவமடைதல் மற்றும் மாதவிடாய் பிரச்னைகளை சீராகக் உதவுகிறது.