இஞ்சி குழம்பு
தேவையான பொருட்கள் :

  • துவரம் பருப்பு -2 ஸ்பூன்
  • கடலை பருப்பு -2 ஸ்பூன்
  • சாம்பார் பொடி  -2 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம்  - 3
  • புளி         - சிறிதளவு  
  • பூண்டு           - 20 பல்
  • இஞ்சி       - 25 கிராம்
  • வறுத்து பொடித்த வெந்தயம்  - 1 ஸ்பூன்
  • கடுகு           - 1 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி  - சிறிதளவு
  • பெருங்காயம்   - சிறிதளவு
  • கறிவேப்பிலை –  சிறிதளவு
  • நல்லெண்ணெய்   - 4  ஸ்பூன்
  • உப்பு     - தேவையான அளவு
  • புளி     -  சிறிதளவு  

செய்முறை:

  • முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .  பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
  • மூன்றையும் மையாக அரைக்கவும்.
  • கடாயில்   நல்லெண்ணைய்  விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
  • பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.   1   டம்ளர் தண்ணீர்  விடவும்.
  • புளி  கரைத்த   தண்ணீர்  சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடிஎல்லாம் சேர்க்கவும் .
  • நன்கு கொதித்து கெட்டியாகி   எண்ணெய்  பிரிந்து  வரும்போது   இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.