சிம்பிள் சாம்பார்
தேவையான பொருட்கள் :

  • துவரம் பருப்பு வேகவைத்தது – அரை கப்
  • நறுக்கிய பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் – 1 கப்
  • வெங்காயம், தக்காளி – 1
  • புளி – சிறிது
  • சாம்பார் பவுடர் – 2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள், வெந்தயம், கடுகு, பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2
  • எண்ணெய் – 2 ஸ்பூன்
  • உப்பு – சிறிது

செய்முறை:

  • கடாயில்  எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், காய்கறிகள், மஞ்சள்தூள், சாம்பார் பவுடர், உப்பு சேர்த்து நன்கு வதக்கி பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகும்வரை கொதிக்க விடவும்.
  • இப்போது வேகவைத்த பருப்பு, நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து புளிக்கரைசலை ஊற்றி இறக்கி விடவும். வேறொரு வாணலியில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து சாம்பாரில் கொட்டி பரிமாறவும்.