கருப்பு கொண்டைக் கடலை குழம்பு
தேவையான பொருட்கள் :

  • கருப்பு கொண்டைக் கடலை - 150 கிராம்.
  • வெங்காயம் - 1.
  • தக்காளி - 2.
  • மிளகாய்த் தூள் - 3 ஸ்பூன்.
  • புளி - தேவைக்கு.
  • தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்.
  • முந்திரி - 2.
  • கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.
  • காய்ந்த மிளகாய் - 2.
  • உப்பு, எண்ணெய், கொத்தமல்லி - தேவைக்கு.

செய்முறை:

  • கருப்பு கொண்டைக் கடலையை 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். ப்ரஷ்ர்பேனில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயம், தக்காளி வதக்கவும்.
  • பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த கொண்டைக்கடலை சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் புளிக்கரைசலை விடவும்.
  • 5 நிமிடம் கழித்து கொதித்ததும் தேங்காய்த் துருவல், முந்திரி அரைத்து விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு குழம்பு சற்று கெட்டியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.