சுண்டைக்காய் வற்றல் குழம்பு
தேவையான பொருட்கள்:-

  • புளி -பெரிய எலுமிச்சம்பழ அளவு
  • பெருங்காயம் -1/2 ஸ்பூன்
  • துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் - 3
  • வெந்தயம் : 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை -2 கொத்து
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு
  • சாம்பார் பொடி : 2  ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • சுண்டைக்காய் வற்றல் - தேவையான அளவு.


செய்முறை:-

  • முதலில் புளியை  ஊற வைத்துக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பெருங்காயத்தைப் பொறித்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு சுண்டைக்காய் வற்றலை வறுத்து எண்ணெயில் போட்டு பொறித்தெடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் கடுகை வெடிக்க விட்டு, துவரம்பருப்பு, வெந்தயம், மிளகாய்த் துண்டுகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு ஒவ்வொன்றாக நன்கு வறுக்க வேண்டும். லேசாகப் பொன் நிறம் வந்தவுடன் சாம்பார் பொடியைப் போட்டு மேலும் வறுக்கவும்.
  • இப்பொழுது கரைத்த புளித் தண்ணீரை அதில் விடவும். வறுத்து வைத்துள்ள சுண்டைக்காய் வற்றலையும் அதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போடவும். பெருங்காயத்தைச் சேர்த்து 6 கொதிக்க விடவும். கொதித்ததும் ஒரு ஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.