மிளகுக் குழம்பு
தேவையான பொருள்கள்::

வறுத்து அரைக்க

 • தனியா - 3  ஸ்பூன்
 • மிளகு, கடலைப் பருப்பு -  2 ஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் - 2
 • சீரகம் - 1 ஸ்பூன்
 • பெருங்காயத்தூள் - சிறிதளவு
 • கறிவேப்பிலை - சிறிதளவு
 • தாளிக்க
 • கடுகு - ஒரு டீஸ்பூன்
 • வெந்தயம் - கால் ஸ்பூன்
 • நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
 • புளி - எலுமிச்சை அளவு
 • கருவேப்பிலை  - சிறிதளவு
 • உப்பு - தேவையான அளவு


செய்முறை::

 • புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.
 • வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தனித்தனியாக வாசனை வரும்வரை வறுத்து ஆற வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
 • கடாயில்   நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து  அதனுடன்  அரைத்த விழுதைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
 • புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான உப்பு போட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். குழப்பு நன்கு கொதித்து எண்ணெய்  பிரிந்து வந்தவுடன் இறக்கவும்.
 • இந்த குழம்பு மழைக்காலத்திற்கு மிகவும் உகந்தது. தலைவலி சளி இருமலுக்கு  ஏற்ற மருந்து குழம்பு