அரைச்சுக் கிளறல்’ என்று பொதுவாக அழைக்கப்படும் ‘பருப்பு உசிலி’ மிகக் தொன்மையமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இதன் சுவையே சேர்க்கம்படும் பொருள்களில் தான் அடங்கியுள்ளது. மேலும் மற்ற உணவுகளை தனித்துமான ஒன்றாக உள்ளது.
பருப்பு உசிலியைப் பற்றி வளவள என பேசுவதற்கு பதிலாக அவற்றை எப்படி எளிய முறையில் தயார் செய்யலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – காரத்திற்கேற்ப
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித் தழை – சிறிது
மஞ்சள் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து அதில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்றாக அலசவும். பிறகு சிறிதளவு சுடு தண்ணீர் எடுத்து அவற்றுடன் சேர்க்கவும். அதோடு காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயைச் சேர்க்கவும். பின்னர் அவற்றை குறைந்து 1 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
இதற்கிடையில், தேவையான அளவு பீன்ஸ் எடுத்து அவற்றை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பிறகு அதில் உள்ள தண்ணீரை நன்றாக வடிகட்டி விடவும்.
இப்போது, முன்னர் ஊறவைத்த பருப்பு கலவையை ஒரு மிக்சியில் இட்டு, அவற்றோடு மஞ்சள் பொடி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு இட்லி தட்டு எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் தடவி அரைத்து வைத்துள்ள கடலை பருப்பு கலவையே சேர்க்கவும். பின்னர் அவற்றை 7 முதல் 10 நிமிடங்களுக்கு வேக வைத்து விடலாம்.
பருப்பு நன்றாக வெந்த பின்னர் ஒரு தட்டு எடுத்து அதில் அவற்றை ஆற வைக்கவும். நன்றாக அவை குளிர்ந்தவுடன் அவற்றை உதிர்த்து விடலாம்.
அதனைத் தொடர்ந்து, ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்றாக சூடேறிய பிறகு அதில் கடுகு, உளுந்த பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் கருவேப்பில்லை சேர்த்து நன்றாக பொறிய விடவும்.
சிறிதளவு பெருங்காயம் சேர்த்து வதக்கிய பின்னர் பருப்பு கலவையை சேர்த்து விடலாம். அவற்றை 3 நிமிடங்களுக்கு கிளறிய பிறகு முன்னதாக வேக வைத்துள்ள பீன்ஸை எடுத்து அவற்றுடன் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் அவற்றை 5 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேக வைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இந்த பருப்பு கலவையை சில நிமிடங்களுக்கு வேக வைத்து, அவற்றுடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து கீழே இறக்கிக் கொள்ளவும்.
இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘பருப்பு உசிலி’ தயாராக இருக்கும். இவற்றை உங்கள் முக்கிய உணவாகவும், சிற்றுண்டியாகவும் ருசிக்கலாம்.