பருப்பு வடை, மெதுவடைலாம் “போருங்க”… மொறுமொறு வாழைப்பூ வடை செய்வது எப்படி?
தென்னிந்திய உணவு பலகாரங்களில் வடைக்கு முக்கிய இடம் உண்டு. இவை உங்கள் உணவுகளுடனோ அல்லது இடைவேளை நேரங்களிலோ உண்ண ஏதுவான ஒன்றாக உள்ளன. மேலும் உணவங்களிலும், டீ கடைகளிலும் எளிதில் கிடைக்கும் சிற்றுண்டியாகவும் உள்ளன.

வடைகளில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்க வல்லதாக உள்ளன. அந்த வகையில் வாழை பூவில் செய்யப்படும் வடை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஊட்டச்சத்து மிகுந்த ஒன்றாக உள்ளது. இந்த வாழை பூ வடை செய்வதொன்றும் பெரிய மாயை வித்தை அல்ல. மற்ற வடைகளை செய்வது போலத்தான் இதற்கான செய்முறையும். அப்படிப்பட்ட எளியமையான செய்முறையை உங்களுக்காக இங்கு வழங்கியுள்ளோம்.  


இப்போது வாழை பூ வடை செய்வதற்கான தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பார்க்கலாம்.

வாழை பூ வடை செய்யத் தேவையான பொருட்கள்

வாழை பூ – பொடியாக நறுக்கி மோரில் ஊறவைத்தது 

1/4 கிலோ – கடலை பருப்பு (2 மணி நேரம் ஊறவைக்கவும்)

இஞ்சி 

பூண்டு 

கருவேப்பிலை – பொடியாக நறுக்கியது 

வெங்காயம் 

கொத்தல்லி 

உப்பு – தேவைக்கேற்ப 

சமையல் எண்ணெய் 

செய்முறை 

முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் 2 மணி நேரம் ஊறவைத்த கடலை பருப்பு நொறுநொறுப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு தட்டில் எடுத்து, அவற்றுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, வெங்காயம், கொத்தல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். 

அதன் பின்னர் ஒரு கடாய் எடுத்து சமையல் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு மிக்ஸ் செய்து வைத்துள்ள கலவையை வடை போன்று தட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும். பொறிக்கும் போது பொன்னிறமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப அடுப்பின் தனலை மாற்றிக் கொள்ளவும்.

இப்போது நீங்கள் விரும்பிய வாழை பூ வடை தயாராக இருக்கும். நீங்களும் கண்டிப்பாக ஒரு முறை முயற்சிக்கலாம்.