அருமையான ”பெப்பர் சிக்கன்” ரகசியம் இது தான்… ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க
நாம் மிகவும் விரும்பி உண்ணும் வகைகளில் சிக்கன் வகையும் ஒன்று. சிக்கன் இப்போது பல வெரைட்டிகளில் கடைகளில் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் தனிதத்துவமான சுவை உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்கள் உள்ளன. இந்த மசாலாக்கள் சுவை மிகுந்த ஒன்றாகவும், நாம் உண்ணும் சிக்கனுக்கு தனித்துவமான பண்பையும் கொடுக்கிறது.

அப்படிப்பட்ட தனிதத்துவமான சுவையையும், காரமான மசாலா கலவையையும் கொண்டுள்ள பெப்பர் சிக்கன் செய்யவதற்கான ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.


பெப்பர் சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க

முழு தனியா – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
சோம்பு – 1 டீ ஸ்பூன்
முழு மிளகு – 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2

பெப்பர் சிக்கன் மசாலா செய்ய

சிக்கன் – கிலோ
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
வெங்காயம் – 4 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு – 2 டீ ஸ்பூன் (தட்டியது)
தக்காளி – 3 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
முன்னர் அரைத்து வைத்துள்ள மசாலா – 5 டீ ஸ்பூன்
கருவேப்பிலை
உப்பு

மசாலா அரைக்க – நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் முழு தனியா, சீரகம், சோம்பு, முழு மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு 3 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். அவை நன்கு ஆறிய பிறகு, ஒரு மிக்சியில் அவற்றை இட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

பெப்பர் சிக்கன் மசாலா செய்ய

ஒரு கனமான பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அவை சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் நறுக்கிய வெங்காயம் போன்றவற்றை சேர்க்கவும். அவை பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். பிறகு அவற்றோடு தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட்டை சேர்க்கவும். தொடர்ந்து நறுக்கிய தக்காளியையும் சேர்க்கவும்.

அவை ஓரளவிற்கு வதங்கிய பிறகு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அவற்றை நன்றாக கிளறிய பிறகு, நன்கு கழுவி எடுத்து வைக்கப்பட்டுள்ள சிக்கனை அவற்றோடு சேர்க்கவும். நன்கு கிளறிய பிறகு சிக்கன் வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (1/2 லிட்டர் போதுமானது) சுமார் 15 நிமிடங்களுக்கு மூடியை முடி கொதிக்க விடவும்.

இப்போது சிக்கன் நன்றாக வெந்து இருக்கும். ஆகவே அவற்றில் காரம் சேர்க்க முன்னர் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும் (காரத்திற்கேற்ப). பிறகு மசாலாவை நன்கு கிளறி அவற்றோடு சிறிதளவு கருவேப்பிலை சேர்க்கவும். அதன் பின்னர் மூடியால் முடி சுமார் 10 நிமிடங்களுக்கு சிக்கனை வேக வைக்கவும்.

10 நிமிடங்களுக்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த பெப்பர் சிக்கன் தயாராக இருக்கும். அவற்றை உங்கள் உணவுகளுடன் பரிமாறிக்கொள்ளலாம்.