கல்யாண வீட்டு வத்தக் குழம்பு; இப்படி செஞ்சா எல்லாருக்கும் புடிக்கும்!
நம்முடை உணவு முறைகளில் குழம்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. அவற்றில் பிரபலமான ஒரு குழம்பாக வத்தல் குழம்பு உள்ளது. அதிலும் வீட்டு விசேஷங்களில் பரிமாறப்படும் வத்தல் குழம்பின் ருசியே தனி தான்.

இப்படி சுவையில் டேஸ்டாகவும், ருசியில் அல்டிமேட்டாகவும் உள்ள கல்யாண வீட்டு வத்தக் குழம்பு எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்

சமையலுக்கு

1/4 டீ ஸ்பூன் – பெருங்காயம்
2 டீ ஸ்பூன் – மிளகாய் தூள்
2 டீ ஸ்பூன் – சீரக தூள்
1/2 டீ ஸ்பூன் – மல்லி தூள்
கருவேப்பிலை
உப்பு
சுண்ட வத்தல்
10 – 12 – சின்ன வெங்காயம்

தாளிக்க

நல்லெண்ணெய்
1/2 டீ ஸ்பூன் உளுந்தம் பருப்பு
2 – காய்ந்த மிளகாய்
1/4 டீ ஸ்பூன் – வெந்தயம், கடுகு
சிறிதளவு புளி – (10 நிமிடம் தண்ணீரில் ஊறியது)
5, 6 – பூண்டு

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் கனமான பாத்திரத்தை எடுத்து அதில் தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு சமையலுக்கு கொடுத்துள்ள பொருட்களை பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

இவற்றை நன்கு கிளறி வதக்கிய பிறகு அவற்றில் புளி கரைசலை சேர்க்கவும். அதோடு தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக்கொள்ளவும். ஒருவேளை அதிக புளி சேர்த்து விட்டால் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது நன்கு கொதித்து வந்த பிறகு சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் தனலை தொடரவும். அவை நன்கு சுண்டிய பிறகு சாதத்தோடு சேர்த்து பரிமாறவும்.