Rasam Recipes in Tamil: நமது உணவு கலாச்சாரத்தில் ரசம் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் பொருட்களை குறிப்பிடலாம். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம் மற்றும் புளிக்கரைசல் போன்றவை மருத்துவ குணம் வாய்ந்தவையாக உள்ளன. இதில் சேர்க்கப்படும் புளிக்கரைசல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.
ரசம் காய்ச்சல், இருமல், தும்மல், உடல் சோர்வு, உடல் களைப்பு, செரிமானப் பிரச்சனை, சத்துகுறைபாடு, தொண்டை கமறல், வயிற்று புண் என அனைத்து நோய்களுக்கும் மருந்தாக உள்ளது.
ரசத்தில் பல வகைகள் உள்ள நிலையில், சளி இருமலைப் போக்கும் செலவு ரசம் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
செலவு ரசம் செய்யத் தேவையான பொருட்கள்
அரைக்க
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
மஞ்சள் தூள் – சிறிதளவு
மல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்
நாட்டுத்தக்காளி – 2 பெரியது
பூண்டு – 5
சின்ன வெங்காயம் – 5
கருவேப்பிலை – 1கொத்து
காய்ந்த மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு ரசத்திற்கு தேவையான அளவு தணண்ணீரை அவற்றோடு சேர்க்கவும். பிறகு அவற்றோடு தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து மிதமான சூட்டில் நுரை வரும் வரை கொதிக்க வைக்கவும்.
இதற்கிடையில், ரசத்தை தாளிக்க ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு பொறியவும், கருவேப்பிலை – காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறி ரசத்தோடு சேர்த்துக்கொள்ளவும்.
ரசம் நுறை தட்டி பொங்கி வரும் போது கீழே இறக்கி பரிமாறி சுவைக்கவும்.