சின்ன வெங்காயம், பூண்டு சட்னி
சின்ன வெங்காய பூண்டு சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:-

அரைக்க

சின்ன வெங்காயம் – 150 கிராம்
வரமிளகாய் – 10
பூண்டு பல்லு – 5
தண்ணீர் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – சிறிதளவு
கடுகு – 1/2 ஸ்பூன்
பெருங்காயம் தூள் – 2 சிட்டிகை
கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:

முதலில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.

இவை நன்கு வதங்கியதும் அவற்றை முன்னர் அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்துக்கொள்ளவும்

இப்போது உங்களுக்கு பிடித்த காலை உணவுகளோடு சேர்த்து ருசிக்கவும்.