நாட்டுக்கோழி குழம்பு

சமையல் / அசைவம்

தேவையான பொருள்கள்::

  • நாட்டுக் கோழி கறி - ஒரு கிலோ
  • சி.வெங்காயம் -  கால் கிலோ
  • தக்காளி - இரண்டு
  • பட்டை, கிராம்பு, இலை, அன்னாசிப் பூ - தாளிக்க
  • எண்ணை -தேவையான அளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • அரைக்க:
  • சோம்பு -  1 ஸ்பூன்
  • சீரகம் - ஒரு  ஸ்பூன்
  • மஞ்சள் பொடி -  1 ஸ்பூன்
  • பூண்டு -  10 பல்
  • இஞ்சி - சிறிய துண்டு
  • காய்ந்த மிளகாய்  - 15
  • மல்லி  - 3 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் -  1 பத்தை
  • கசகசா - ஒரு டீ ஸ்பூன்

செய்முறை::

  • முதலில் கோழிக் கறியை சிறிய துண்டங்களாக நறுக்கி அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி  சேர்த்து  பிசைந்து  வைக்கவும்.
  • சீரகம், சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு சேர்த்து தனியாக விழுதாக அரைக்கவும்.
  • மிளகாய், மல்லியை தனியாக விழுதாக அரைக்கவும்,
  • தேங்காய் துருவல், கசகசா தனியாக விழுதாக அரைக்கவும்.
  • வெங்காயதம்   தக்காளியை  பொடியாக  நறுக்கவும்.
  • இப்போது கோழிக் கறியை நன்கு கழுவவும்.
  • அடுப்பில் கடாயை  வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வதக்கவும்.
  • வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
  • பிறகு கோழிக்கறியை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி பின் தக்காளி சேர்க்கவும்.
  • ஐந்து நிமிடம் வதக்கிய பின் நான்கு டம்ளர் தண்ணீர், மஞ்சள் ரூ சோம்பு விழுது, உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
  • பின் மிளகாய், மல்லி கலவை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
  • பின் தேங்காய் விழுது சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க