நீங்கள் வாங்கும் நெய் தூய்மையானதா?.... கண்டறிய எளிய வழிகள்...

கலப்படம் செய்யப்பட்ட பசு நெய், சந்தையில் பரவலாகக் காணப்படுவதால், நல்ல தரமான நெய்யைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம்.

ரேஞ்சிட் நெய் (Rancid ghee), அதன் நிறம் மற்றும் அமைப்பு போன்றவற்றால் பெரும்பாலும் நெய் என்ற பெயரில் விற்கப்படுகிறது. உங்கள் நெய்யின் தரம் குறித்து உங்களுக்கு எப்போதாவது சந்தேகம் இருந்தால், இங்கே சில எளிய தந்திரங்கள் உள்ளன.

வெப்ப சோதனை: ஒரு பாத்திரத்தில், ஒரு தேக்கரண்டி நெய்யை சூடாக்க வேண்டும். நெய் உடனடியாக உருகி, அடர் பழுப்பு நிறமாக மாறினால், அது தூய்மையானது. ஆனால், உருகுவதற்கு நேரம் எடுத்து, வெளிர் மஞ்சள் நிறமாக மாறினால்,அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.

உள்ளங்கை சோதனை: உங்கள் உள்ளங்கையில் ஒரு டீஸ்பூன் நெய் விடவும். அது தானே உருகினால் தூய்மையானது.

அயோடின் சோதனை: ஒரு சிறிய அளவு உருகிய நெய்யில், இரண்டு சொட்டு அயோடின் (உப்பு) கரைசலை சேர்க்கவும். அயோடின், ஊதா நிறமாக மாறினால், அதில் ஸ்டார்ச் கலந்திருக்கிறது மற்றும் அது தவிர்க்கப்பட வேண்டும்.

பாட்டில் சோதனை: பாட்டிலில் ஒரு டீஸ்பூன் உருகிய நெய்யை எடுத்து, அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும். பாட்டிலை மூடி வேகமாக குலுக்கவும். பிறகு ஐந்து நிமிடங்களுக்கு விடவும். இப்போது பாட்டிலின் அடியில் சிவப்பு நிறம் இருந்தால், அதில் சமையல் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது.

டபுள் –பாய்லர் சோதனை: நெய்யில் தேங்காய் எண்ணெய் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, டபுள் பாய்லர் முறையைப் பயன்படுத்தி, ஒரு கண்ணாடி ஜாடியில் நெய்யை உருக்கவும். சிறிது நேரம் கண்ணாடி ஜாரை ஃபிரிட்ஜில் வைக்கவும். நெய்யும், தேங்காய் எண்ணெய்யும் தனித்தனி லேயராக இருந்தால் அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்தமுறை இந்த சோதனைகளை பயன்படுத்தி உங்கள் நெய் தூய்மையனதா என கண்டறியுங்கள்!